அழகு நிலையத்தில் விபச்சாரமா? ரெய்டுக்குப் போன போலீசார் செஞ்ச அசிங்க வேலை!!

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 12:26 pm
beauties-at-the-beauty-salon-ride-and-6-lakhs-asked-police

கர்நாடகா மாநிலம் பெங்களூரு கஸ்தூரிபா நகரில் அழகு நிலையம் நடத்தி வருகிறார் சண்டா(31). இவரது அழகு நிலையத்திற்கு திடீரென வந்த ராமமூர்த்தி நகர் போலீசார்  அங்கு விபச்சாரம் நடப்பதாக கூறி சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சண்டா மேலும் கூறுகையில், 7 ஆண்டுகளாக அழகு நிலையம் நடத்தி வருவதாகவும் தான் வெளியே சென்றிருந்த போது மப்டி உடையில் இருந்த சில போலீசார் எனது அழகு நிலையத்துக்குள் திடுதிப்பென புகுந்து ரைட் நடத்தியுள்ளனர்.

இங்கு விபச்சாரம் நடப்பதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது என போலீசார் கூறி எனது கடை ஊழியர் பூஜா உள்பட நாலு பேரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர் . மேலும் எனது நிலையத்தை பூட்டி சாவியையும் கொண்டு சென்றனர் . இதனையறிந்து காவல் நிலையம் சென்றப்போது, அழகு நிலையத்தை திறக்கவும், தனது தொழிலாளர்களை விடுவிக்கவும் போலீசார் ரூ. 6 லட்ச  லஞ்சம் கேட்டு 1 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டதாக தெரிவித்தார். மேலும் தனது நிலையத்தில் அது போல விபச்சாரம் எதுவும் நடக்கவில்லையெனவும் யாரோ வேண்டாதவர்கள் செய்த சதி இது என கூறினார் . பணம் பெற்ற போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close