ஒரே பெண்ணைக் காதலிக்கும் இருவர்! அரிவாள்களுடன் மருத்துவமனையில் மோதல்!

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 11:23 am
woman-affair-lovers-clashed-in-hospital

மருத்துவமனையில் வேலைப் பார்க்கும் பெண் ஒருவர் இரண்டு ஆண்களிடம் நெருக்கமாகப் பழகியதால் இருவரும் அரிவாள்களை கையில் எடுத்து வெட்டு குத்தில் இறங்கினர். 

சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை ஒன்றில் திருமணம் ஆன பெண் ஒருவர் பணிபுரிந்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இதனால் தனிமையாக வசித்து வந்த அந்த பெண்ணுக்கு, அவர் வசிக்கும் பகுதியில் இருந்த ஐய்யப்பன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில் சில மாதங்களாக அந்த பெண்ணின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவே அதிருப்தியடைந்த ஐய்யப்பன், அந்தப் பெண்ணுக்கும் மருத்துவமனையில் அவரோடு நெருக்கமாகப் பழகும் ரவி என்பவருக்கும் தொடர்பு இருந்ததைக் கண்டுபிடித்துள்ளார். இதையறிந்து ஆத்திரமான ஐய்யப்பன் மருத்துவமனைக்கு வந்து பணியில் இருந்த ரவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை வெட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் மருத்துவமனை வளாகம் பதற்றமாக அங்கிருந்த காவலாளிகள் தடுக்க முயன்றும் முடியவில்லை. இதனிடையே தகவல் அடிப்படையில் அங்கு வந்த காவலர்கள் ஐய்யப்பனைக் கைது செய்தனர். இதனிடையே படுகாயமடைந்த ரவி அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close