டார்க் மோட், ஃபேஸ் அன்லாக் .. ‘வாட்ஸ் அப்’ புதிய வசதிகள்..!

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 02:02 pm
whatsapp-features-coming-this-year

2020-ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் பல்வேறு புதிய அப்டேட்ஸ்களை வாட்ஸ் அப் நிறுவனம் கொண்டு வருகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப் செயலியை வாங்கியது முதல் பல்வேறு அப்டேட்ஸ்களை பயன்பாட்டாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்நிலையில் பீட்டா பயன்பாட்டாளர்கள் மூலம் பரிசோதிக்கப்பட்ட சில புதிய வசதிகளை இந்தாண்டு முதல் வாட்ஸ் அப் நிறுவனம் அனைத்து பயன்பாட்டாளர்களுக்கும் கொண்டுவருகிறது. அதன்படி, டார்க் மோட், ஃபேஸ் அன்லாக், டெலிடெட் மெசெஜ் உள்ளிட்ட புதிய வசதிகள் வரவுள்ளன.

அதன்படி, டார்க் மோட் வசதி என்பது வாட்ஸ் அப்பின் செட்டிங்க்ஸ் மெனுவில் சென்றால், டார்க் மோட் என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை செலக்ட் செய்தால், கம்ப்யூட்டரில் வருவதுபோல சிஸ்டம்-வொயிடு டார்க் மோட் வரும். அதிக வெளிச்சம் உள்ள நேரங்களில் இரவில் டார்க் மோட் திட்டத்தை பயன்படுத்தலாம். 

இதேபோல், ஃபேஸ் அன்லாக் அட்டேட் என்பது ஸ்மார்ட்போன்களில் செல்ஃபி மூலம் முகத்தை படம் பிடித்து, அதன்மூலம் போனை அன்லாக் செய்து கொள்ளும் முறை ஆகும். 

டெலிட் மெசெஜ் என்ற புதிய அப்டேடும் உள்ளது. எந்த ஒரு மெசெஜையும் டெலிட் செய்த பின்னர் அதனை இந்த ஆப்ஷனை பயன்படுத்தி மீண்டும் கொண்டுவர முடியும். மேலும் ஒரு குழுவில் அட்மின் பதிவிடும் பதிவை, நேரம் குறிப்பிட்டு எப்போது வேண்டுமானாலும் டெலிட் செய்ய முடியும். இதுபோன்ற மேலும் சில வசதிகள் கொண்டுவரவுள்ளதாகவும் இதற்கான புதிய அப்டேட் விரைவில் நடைமுறைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close