இந்தியாவுக்குள் கடத்த முயன்ற 175 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 12:25 pm
175-crore-worth-of-heroin-confiscated

இந்தியா - பாகிஸ்தானின் எல்லையில் உள்ள பஞ்சாப், குஜராத் மாநில எல்லை வழியாக  இந்தியாவுக்குள் போதைபொருள் கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. சில நேரங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத குழுக்கள் இச்செயலில் ஈடுபடுகின்றன. குஜராத்தின் கடல் வழியாக சர்வதேச கும்பல்கள் போதை பொருட்களை இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றன.

இதனை இந்திய கடலோர காவல்படையினர் முறியடித்து வருகின்றனர். இந்நிலையில், குஜராத்-கட்ச் கடற்கரை பகுதியில், இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடல் மார்க்கமாக சர்வதேச கும்பல் ஒன்று ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 175 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட சர்வதேச கும்பலைச் சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களின் விவரங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close