பிரபல சரவணா ஸ்டோர்ஸில் விபத்து! சிக்கிக் கொண்ட சிறுவன்!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 10:02 am
boy-trapped-in-escalator-at-saravana-stores

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள துணிக்கடைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் புதுத் துணி எடுத்து வருகிறார்கள். இந்நிலையில், சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடையான சரவணா ஸ்டார்ஸில், தனது தாயாருடன் பொங்கல் பண்டிகைக்கு புதுத் துணி வாங்கச் சென்றிருந்த சிறுவன், கடையில் இருந்த எஸ்கலேட்டரில் சிக்கிக் கொண்டான்.

8ம் வகுப்பு படித்து வரும் சிறுவனின் தலை சரவணா ஸ்டோர்ஸில் இருந்த எஸ்கலேட்டரில் சிக்கிக் கொண்டது. இதில் படுகாயமடைந்த சிறுவன் ரனில்பாபுவை அங்கிருந்தவர்கள் உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

கூட்டம் அலைமோதும் இடங்களில் பொதுமக்கள் ஜாக்கிரதையாக உங்களது பண்டிகைகளைக் கொண்டாடி மகிழுங்கள். இது மாதிரியான சந்தர்ப்பங்களில், உங்கள் பிள்ளைகளை மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வுடனும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லுங்கள்!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close