விரட்டி விரட்டி கடித்து குதறும் வெறி நாய்கள்.. ஒரு கிராமமே சிகிச்சை பெறும் சோகம்

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 10:14 am
30-people-bitten-by-rabid-dogs

கள்ளக்குறிச்சி தியாக துருவம் அருகே உள்ள சிக்காடு, குன்னியூர், கல் சிறுநாகலூர் உள்ளிட்ட கிராமங்களில், பல வெறி நாய்கள் சுற்றித்திரிகிறது.  ஒரு தெருவுக்கு 15 முதல் 20 வரையிலான வெறி நாய்கள் சுற்றித் திரிகின்றன. இந்த நாய்கள் அங்குள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரையும் விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளது. மேலும், ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை தாக்குகிறது.

அந்த பகுதிகளில் வெறிநாய்கள் கடித்ததால், தற்போது 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தெருநாய்கள் பெருகி விட்டதால் தெருவில் நடமாடவே அச்சமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே வெறி நாய்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close