1 கோடி இழப்பீடு கேட்ட சுபஸ்ரீ வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 10:59 am
1-crore-for-subashree-family

சென்னையில், அதிமுக பிரமுகர் வீட்டு திருமணத்திற்காக சாலையில் வைத்திருந்த  வரவேற்பு பேனர் சரிந்து விழுந்ததில் மென்பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு சுபஸ்ரீயின் மரணம் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. சுபஸ்ரீயின் மரணம் குறித்து சுபஸ்ரீயின் தந்தை வழக்கு பதிவு செய்திருந்தார். மேலும் மகள் மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை ரவி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில், இழப்பீடு குறித்து பரிசீலித்து 4 வாரங்களுக்குள் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுபஸ்ரீயின் தந்தை, 1 கோடி ரூபாய் நஷ்டைஇடு கேட்டு கொடுத்திருக்கும் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்ததுடன், இந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 22ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close