பெண் போலீசின் மகளை பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி!! அதிர வைத்த கொடுமை!!

  முத்து   | Last Modified : 07 Jan, 2020 12:25 pm
assam-cop-sexually-assaulted-teen

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரலும் அதிகரித்துள்ளன. பாலியல் வன்கொடுமை தொடர்பான சில வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில்  மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டாக பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், சக பெண் போலீஸ் அதிகாரியின் 13 வயது மகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 31 ந்தேதி ஐ.பி.எஸ் அதிகாரியின் இல்லத்தில் நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியின் போது, பங்களாவின் அறைக்குள் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது. எனினும், அம்மாநில போலீசார் அந்த அதிகாரியின் பெயரை வெளியிடவில்லை. மூத்த போலீஸ் அதிகாரியாக இருக்கும் சிறுமியின் தாய், தனது மகளுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிறுமியின் வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் போலீஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போலீஸ் சூப்பிரெண்டு விசாரிக்கப்பட்டுள்ளாரா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close