சென்னையில் புத்தகக் காட்சி ஜன9ல் தொடக்கம்! 5,000 மாணவர்களுடன் புத்தகம் வாசித்த ஆட்சியர்!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 11:14 am
chennai-book-fair-starts-on-jan9th

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் புத்தகக் கண்காட்சி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 43-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது.

புத்தக கண்காட்சியையொட்டி மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க பபாசி சார்பில் 'சென்னை வாசிக்கிறது' என்ற நிகழ்ச்சி ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட சென்னை ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி, சுமார் 5000 மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து நூல்களை வாசித்தார். 
பின்னர் மாணவர்கள் மத்தியில் பேசிய ஆட்சியர், 

பொழுதுபோக்குக்காக மட்டுமே புத்தகங்களை வாசிக்கக் கூடாது. புத்தக வாசிப்பு என்பது அடிப்படை அறிவு சார்ந்தது. சமுதாய வளர்ச்சிக்கும், தனி மனித ஒழுக்க மேம்பாட்டுக்கும் புத்தக வாசிப்பு மிக மிக அவசியம். பாட புத்தகங்களை தாண்டி, மற்ற புத்தகங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close