JNU மாணவர்களின் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம்!!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 12:21 pm
congress-protest-against-attack-on-students

ஜேஎன்யுவில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அறிவித்துள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதிக் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று முந்தினம் இரவு  முகமூடி அணிந்துக் கொண்டு வந்த கும்பல் ஒன்று மாணவர்கள் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தியது. இதில் மாணவர் பேரவைத் தலைவர் ஆயிஷ் கோஷ், மண்டை உடைந்து ரத்தம் சிந்தியது. இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த 18 பேர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நாட்டின் பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஜேஎன்யுவில் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை தமிழக காங்கிரஸ் கமிட்டி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலைக் கண்டித்து இன்று மாலை தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று மாலை 4 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் நடத்த இருக்கிறார்கள். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close