அரசு ஊழியர்களில் யாருக்கெல்லாம் பொங்கல் போனஸ் கிடைக்கும்?! தமிழக அரசு அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 08 Jan, 2020 08:57 am
pongal-bonus-for-govt-staffs

தமிழக அரசு சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் ஆண்டு தோறும் பொங்கல் போனஸ் வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான பொங்கல் போனஸ் தொகையாக அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அனைத்து துறைகளிலும் தொகுப்பு ஊதியம் பெற்று வரும் பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

ஓய்வூதியம் பெற்று வருபவர்களில், சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close