TNPSC  தேர்வில் மிகப் பெரிய மோசடி!! 16 லட்சம் பேரை ஏமாற்றிய அதிர்ச்சி தகவல்!!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 08:55 pm
cheating-in-tnpsc-exam-results

தமிழகத்தில் நடைப்பெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியான நிலையில், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் இந்த தேர்வை எழுதிய 40 பேர் பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பெற்றுள்ளது தேர்வில் கலந்து கொண்ட 16 லட்சம் பேரை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வை தமிழகம் முழுவதும் மொத்தம் 16 லட்சத்து 865 எழுதினார்கள். இந்நிலையில் வெளியான தேர்வு முடிவுகளில், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் மட்டும் 40 பேர் முதல் நூறு இடங்களுக்குள் தேர்வானது பலத்த அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இவர்கள் அனைவருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதே தேர்வு மையத்தில் உள்ளூரைச் சேர்ந்த பலரும் தேர்வு எழுதி இருந்த நிலையில், அவர்களில் தேர்ச்சிப் பெற்றவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருக்கிறது. 

இதன் மூலம் அரசு தேர்வில், மிகப் பெரிய அளவில் முறைகேடும், மோசடிகளும் நடந்துள்ளதாக பிற தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து பேசிய டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள், ஆவணங்களை எல்லாம் சரி பார்த்த பின்பு தான் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

16 லட்சம் பேரை அதிகாரிகள் ஏமாற்றியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், அரசு தேர்வுகளில் இப்படி மிகப் பெரிய மோசடி நடந்திருப்பதை நேர்மையாக விசாரணை செய்து, குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், மீண்டும் தேர்வை முறையாக நடத்த வேண்டும் என்றும் தேர்வு எழுதியவர்கள் முறையிட்டு வருகின்றனர்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close