இந்த 13 மாவட்டங்களிலும் மழை நீடிக்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 03:35 pm
another-2-days-rain-will-continue-in-tn

தமிழகத்தில் மழை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் பாலசந்திரன் கூறும் போது, வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தற்போது தமிழகத்தில் மழை பெய்து வருவதாகவும், இந்த மழை மேலும் 2 நாட்களுக்கு தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் கனமானது வரை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close