நளினியை விடுதலை செய்ய முடியாது! மத்திய அரசு உறுதி!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 03:43 pm
nalini-cannot-be-released-central-government-confirms

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,  10 ஆண்டுகள் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்த 3,000க்கும் அதிகமான கைதிகளை நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்துள்ளனர். நான் 28 வருடங்களுக்கும் மேலாக சிறை தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், என்னை இதுபோல முன்கூட்டியே விடுதலை செய்யவில்லை. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நான் உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், இந்த தீர்மானத்துக்கு இது நாள் வரை தமிழக கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். எனவே என்னை விடுதலை செய்யாமல் சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால், ஐகோர்ட்டில் என்னை ஆஜர்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆஜராகி, நளினியை விடுவிக்க கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு நிராகரித்து விட்டது என்று கூறினார். இதையடுத்து இந்த வழக்கு இம்மாதம் 28-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close