தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை மதுபாலா மகள்! ரொம்ப க்யூட்டா இன்னொரு ஹீரோயின்!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 04:18 pm
actress-madhubala-daughter-enters-kollywood

தமிழ் சினிமாவில் ‘அழகன்’ படம் மூலமாக அறிமுகமான நடிகை மதுபாலா முதல் படத்திலேயே ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டார். அதன் பிறகு அவரது நடிப்பில் வெளியான ‘வானமே எல்லை’, ‘ஜென்டில் மேன்’, ‘ரோஜா’ போன்ற படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட் ரகம் தான். 

தொடர்ந்து ஹிட் வரிசைப் படங்களில் நடித்து வந்த மதுபாலா பின்னர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி என்று முன்னணி நடிகையாக வலம் வந்தார். புகழின் உச்சாணியில் இருந்த போதே ஆனந்த் ஷா என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட மதுபாலா அதன் பின்னர் திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

திருமணத்திற்குப் பிறகும் பல படங்களில் மதுபாலாவை நடிக்க வைப்பதற்கு தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முயற்சி செய்தனர். ஆனால், மீண்டும் நடிக்க விருப்பம் இல்லாமல் வந்த வாய்ப்புகளை எல்லாம் நிராகரித்து வந்த மதுபாலா மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மொரு’  படத்தில் நடித்திருந்தார். இப்போதும் ரசிகர்கள் மதுபாலாவைக் கொண்டாடவே செய்கின்றனர்.

இந்நிலையில், புத்தாண்டை தனது இரு மகள்களுடன் க் கொண்டாடிய மதுபாலா, அந்தப் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். தற்போது மதுபாலாவின் மகள்களின் புகைப்படங்களைப் பார்த்த தமிழ் சினிமா இயக்குநர்கள், இவ்வளவு பெரிய மகள் உங்களுக்கு இருப்பது தெரியாது என்று, மதுபாலா மகளை நடிக்க வைப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

நடிகை மதுபாலா, பிரபல இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்க துவங்கியிருப்பதால் கூடிய விரைவில் மதுபாலாவின் மகள் தமிழ் சினிமாவில் களமிறங்குவார் என்கிறார்கள்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close