தர்பாருக்காக ஹெலிகாப்டரில் கொண்டாட்டம்! ரஜினி ரசிக்கிறாரா?! 

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 04:36 pm
darbar-fans-celebrations-in-helicopter

ரஜினிகாந்த் நடித்த `தர்பார்' திரைப்படம் நாளை காலை அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோவாக ரிலீஸாகிறது. தமிழகத்தில் வரும் 9ம் தேதி திரைக்கு வர இருக்கிற நிலையில், ரஜினி ரசிகர்கள் ஒவ்வொரு ஊரிலும் தர்பார் படத்தைக் கொண்டாடி வரவேற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டி ப்ளக்ஸில் இருக்கும் ஐந்து திரையரங்குகளிலும் தர்பார் படம் திரையிடப்பட தயாராக உள்ளது. இந்நிலையில், அந்த மட்டிப்ளக்ஸ் திரையரங்கில் வைக்கப்பட்டிருக்கும் ரஜினியின் கட்-அவுட்டுக்கு ஹெலிகாப்டரிலிருந்து மலர்களைத் தூவி கொண்டாடுவதற்காக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 6 அரசு துறைகளிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள் ரஜினிகாந்த் ரசிகர் கனகராஜ். இது குறித்து, சேலம் ரஜினி ரசிகர் கனகராஜுடன் பேசிய போது, இந்த தகவலை உண்மை தான் என்று உறுதிபடுத்தினார். 

எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்லேயிருந்தே நான் தீவிர ரஜினி ரசிகன். அவருடைய ஒவ்வொரு படத்துக்குமே கொண்டாட்டமா பால் அபிஷேகம், மாலைன்னு அதகளப்படுத்துவோம். 70 வயசுல எங்க தலைவர் எப்படி மாஸா தர்பார் படத்துல வர்றார்  பார்த்தீங்கள்ல... அதனால் வித்தியாசமா ஏதாவது செய்யணும்னு நெனைச்சு இப்படி யோசிச்சோம். உடனடியா பெங்களூர்ல டாவன்ஜர் ரீசுகர்ன்ற நிறுவனத்திடம் பேசினோம். 5 லட்சம் பணமும், பர்மிஷனும் வாங்கிக் கொடுத்தா ஹெலிகாப்டரோட வர்றதா சொன்னாங்க. உடனே சேலம் கலெக்டர் ஆபீஸ், போலீஸ் கமிஷ்னர் அலுவலகம், ஈ.பி, ஃபயர் சர்வீஸ், பி டபிள்யூ டி இன்ஜினியர், ஏர்போர்ட் ன்னு ஆறு துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்திருக்கேன். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கலை. இப்போ கலெக்டர் ஆபீஸ்,ஈ பி., ஃபயர் சர்வீஸ்னு 3 டிப்பார்மெண்ட் பர்மிஷன் கொடுத்துட்டாங்க. மற்ற மூன்று துறையினரும் தர்றதா சொல்லியிருக்காங்க என்றார். 

ரஜினி அவருடைய ரசிகர்கள் இப்படிக் கொண்டாடிவதை எல்லாம் ரசிக்கிறாரா? இல்லை அவர் கவனத்துக்கு இந்த செய்தி எல்லாம் போய் சேரவே இல்லையா? என்கிற் தகவல்கள் தெரியவில்லை. நமக்குத் தான் இன்னொரு ஜெயலலிதாவைப் போன்ற மனோபாவம் உள்ள தலைவரை அவரது ரசிகர்கள் உருவாக்கி விடுவார்களோ என்கிற கவலை?!

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close