‘த்ரிஷ்யம்’ புகழ் ஆர்யன் சாலை விபத்தில் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்!

  அனிதா   | Last Modified : 07 Jan, 2020 05:06 pm
famous-director-road-accident

பிரபல இயக்குநர் ஜீத்து ஜோசப்பிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய விவேக் ஆர்யன் கடந்தாண்டு ‘ஒருமையில் ஒரு சிஷ்ரம்’ படத்தின் மூலமாக மலையாள திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார்.  இவர் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, தேவாலயத்திற்கு தனது மனைவி அமிர்தாவுடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரது பைக்கின் குறுக்கே வேகமாக ஒரு நாய் ஓடி வந்ததும், நாய் மீது மோதி விடாமல் இருப்பதற்காக தனது டூ வீலரை திருப்பியதில் நிலைதடுமாறி பைக்கிலிருந்து இருவரும் கீழே விழுந்தனர். 

இதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில், கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இயக்குநர் விவேக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு மரணமடைந்தார். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த இயக்குநர் விவேக் ஆர்யனின் திடீர் மறைவு மலையாள திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close