'தர்பார்' வெளியாகும் நாள் சம்பளத்துடன் விடுமுறை! தனியார் நிறுவனம் அதிரடி!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 05:34 pm
holiday-for-darbar-fdfs

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வரும் 9ம் தேதி வெளியாகும் தர்பார் படத்திற்காக ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று, அதன் ஊழியர்களுக்கு தர்பார் வெளியாகும் நாளில், தர்பார் படம் பார்ப்பதற்காக சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல லோன் வழங்கும் நிறுவனமான மை மணி மந்த்ரா எனும் நிறுவனம் “தலைவரின் தர்பார் முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் செலவை அலுவலகம் ஏற்றுக் கொள்ளும் என்றும், அன்றைய தினம் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும், பொங்கல் போனஸும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

திரையரங்குகளுக்கு மறக்காமல் வர அழைப்பு விடுக்கிறோம் என்று அச்சடித்தக் காகிதத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த நிறுவனம் இது குறித்து வெளியிட்டிருந்த அறிவிப்பு இதோ...

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close