'திருமணம் செய்வேன்' - ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை..

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 06:42 am
college-student-has-been-arrested-for-sexually-abusing-a-minor-girl

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள ஜலகண்டாபுரம் அம்மன் கோவில்காடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். நெசவு தொழிலாளியான இவருக்கு தேவி என்ற மனைவியும் 17 வயது மகளும் உள்ளனர். இவரது மகள் ஓமலூர் அருகே உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.

இதனால், அவரது பெற்றோர்கள் மகளை அக்கம்பக்கத்தில் தேடினர். மேலும், உறவினர்கள் வீடு மற்றும் மாணவியின் நண்பர்கள் வீடுகளிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(21) என்பவர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் சதீஷ்குமார் செல்போன் நகர்வுகளை கண்காணித்து அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்தனர்.

அதன்படி உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை கைது செய்து, அவரிடமிருந்து கல்லூரி மாணவியை மீட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, கல்லூரி மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சதீஷ்குமாரை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close