நிர்பயா வழக்கு! 3ம் எண் சிறையில் தூக்கு! தூக்கிலிடும் ஊழியர் பணி காலியாக இருக்கிறது!

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 12:55 pm
nirbhaya-died-4-convicts-to-hang-on-january-22

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஒருவர் சிறையில் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. மாணவியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும் வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் என தனது உத்தரவில் நீதிபதி கூறியிருந்தார். இந்நிலையில், “4 குற்றவாளிகளில் 3 பேர் 2-ம் எண் சிறையிலும், ஒருவர் 4-ம் எண் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கோர்ட்டு உத்தரவுப்படி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு அவர்கள் 3-ம் எண் சிறையில் தூக்கிலிடப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் திகார் சிறையில் தூக்கிலிடும் ஊழியர் பணியிடம் காலியாக இருக்கிறது. எனினும் நீதிமன்ற உத்தரவால் அவர்கள் 4 பேரையும் தூக்கிலிட வேண்டும். எனவே மீரட் சிறையில் இருந்து தூக்கிலிடும் ஊழியர்  திகார் சிறைக்கு வரவழைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இன்னும் குறைவான நாட்களே இருப்பதால் அவர்களை தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள், ஒத்திகை பணிகளை திகார் சிறைத்துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close