பெண்களின் நிர்வாணப் புகைப்படங்கள்! பகீர் கிளப்பிய இன்டர்நெட் சென்டர் ஓனர்!!

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 11:37 am
internet-center-owner-held-threatening-women-their-nude-pic

சென்னை வண்ணாரபேட்டையில் 30 வயதான ராஜசிவசுந்தரம் என்பவர் இன்டர்நெட் சென்டர் நடத்தி வருகிறார். இவர் பேச்சிலேயே பெண்களை மயக்குவதில் கில்லாடி. தனது இன்டர்நெட் சென்டருக்கு வரும் அழகு பெண்களிடம் நைசாக பேசி அவர்களுக்கு வலை விரிப்பார். அவரின் வலையில் விழும் பெண்களிடம் தொலைப்பேசியில் பேசுவது, தனிமையில் சந்திப்பது என தனது பாணியில் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வார். அப்போது எடுக்கப்படும் புகைப்படங்களை நிர்வாண ஆல்பமாக தயாரித்து பின்பு அதை அவர்களிடம் காட்டி மிரட்டி பணம் பறிப்பார்.

பணம் கொடுக்க மறுத்தால் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டுவார். வழக்கம் போல் ஒரு மைனர் பெண்ணிடம் தன் லீலையை காண்பித்து ஒரு நிர்வாண போட்டோவை தயாரித்தார். பின்னர் அந்த நிர்வாண போட்டோவை அந்த சிறுமியிடம் காமித்து இதை ஆன்லைனில் வெளியிடுவேன் என் மிரட்டி பணம் கேட்டார். இதை அந்த சிறுமி தன் தந்தையிடம் கூற அவரின் தந்தை அந்த இளைஞர் மீது போலீசில் புகார் கொடுத்தார்.

போலீசார் அவரின் இன்டர்நெட் சென்டரை சோதனையிட்ட போது பல குடும்ப பெண்களின் நிர்வாண போட்டோ அவரிடம் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை தன்னுடைய கணினியில் சேமித்து வைத்திருந்தது கண்டு போலீசார் அதிர்ந்தனர். போலீசார் விசாரணையில் இன்டர் நெட் சென்டருக்கு வரும் பெண்களிடம் பழகி போட்டோ எடுத்து பணம் பறிப்பதை தொழிலாக கொண்டுள்ளார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close