நோயாளியைப் பார்க்காமலே சிகிச்சை!கோடிக்கணக்கில் அபராதம் கட்டிய மருத்துவர்!

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 12:53 pm
doctor-gets-2-years-jail-healthcare-fraud

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 56 வயதான மருத்துவர் கைன் குமார் மீது நோயாளிகளுக்கு பொருந்தாத மருந்துகளை வழங்குவதாக புகார் எழுந்தது. பின்னர் இந்த விவகாரம் பெரிதாகவே, அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பலதரப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு மோசடித் திட்டத்தில் ஈடுபட்டதாகவும், ஆயிரக்கணக்கான ஓபியாய்டு வலி நிவாரணி மருந்துகள் மற்றும் Muscle relaxers களை  சட்டவிரோதமாக பரிந்துரைத்ததாகவும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது. மருத்துவ ரீதியாக அவசியமில்லாத மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுத்ததை  குமார் ஒப்புக் கொண்டார்.

இவர் 2013 முதல் 2016 வரை, நோயாளிகளை பரிசோதிக்காமலே, ஓபியாய்டு மருந்துகளை வழங்குமாறு குமார் தனது அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார். குமாரின் பெயரை மருந்துசீட்டுகளில்  கையெழுத்திடுமாறு தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியதன் மூலமும், தனது ஊழியர்களுக்கு முன்பே கையொப்பமிடப்பட்ட மருந்துகளை வழங்கியதாகவும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனிடையே கடந்த ஆண்டு நடந்த விசாரணையின்போது கைன் குமார், மருத்துவ மோசடி செய்ததையும், ஹைட்ரோகோடோன் விநியோகம் செய்த  குற்றத்தையும்  ஒப்புக்கொண்டார். இதனையடுத்து விசாரணை நடத்தி வந்த கலிபோர்னியா  நீதிமன்றம், கைன் குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும்  ஒரு மில்லியன் டாலர் அபராதம் கட்டவும்  நீதிபதி ஆணையிட்டார்.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close