ஊழியர்கள் முறையாக சர்வீஸ் செய்வதில்லை.. மேனேஜரை புரட்டி எடுத்த வாடிக்கையாளர்கள்

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 09:12 am
showroom-manager-assaulted-over-loan-talk-by-customers

பெங்களூருவில் உள்ள டொயோட்டா கார் ஷோரூமில் மேலாளராக இருக்கும் குருநாத்திடம் சிவகுமார் என்பவர் கார் வாங்க இரண்டு பேருடன் வந்தார். இதில் சிவகுமாரின் சகோதரர் இங்கு ஏற்கனவே கார் வாங்கியுள்ளார் .அதனால் மேனேஜர் குரு அவர்களிடம் லோன் வாங்கும் நடைமுறைகளை பற்றி விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது சிவகுமாருடன் வந்த இருவர் அந்த ஷோரூம் ஊழியர்களை பற்றி அவர்கள் சரியான முறையில் சர்வீஸ் செய்வதில்லை எனவும், நாய் எனவும் கடுமையான வார்த்தைகளால் திட்டினார் .

குரு அவர்களை பார்த்து அப்படி திட்டாதீர்கள் என கூறினார். அப்போது திடீரென அந்த இருவரும் மேனேஜர் குருநாத்தையும் தகாத வார்த்தைகளால் பேசி கடுமையாக தாக்க தொடங்கினர் .இதனால் ஷோரூம் ஊழியர்கள் அங்கு கூடி அவர்கள் சண்டையை தடுத்து நிறுத்த முயன்றனர். பின்னர் அருகில் இருந்த காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர். இந்த தாக்குதல் தொடர்பான காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் கார் ஷோரூமில் உள்ள ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close