மனைவி தற்கொலையால் மனஉளைச்சல்.. மின்மாற்றியில் ஏறி மிரட்டியவர் உயிருக்குப் போராட்டம்

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 09:30 am
madurai-army-man-threatened-and-stabbed

மதுரை திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூரைச் சேர்ந்தவர் சக்தி. ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இரு தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதால் சக்தி மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மனைவி தற்கொலை தொடர்பான விசாரணைக்காக சக்தி ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வளாகத்திலிருந்த மின்மாற்றியில் திடீரென ஏறினார்.

தன் மனைவியை நினைத்தும் அவர் தற்கொலை செய்துக்கொண்டதையும் கூறி கதறி அழுதார். சுற்றியிருந்தவர்கள் சமாதானப்படுத்தி அவரைக் கீழே இறங்கச் சொல்லி கூச்சலிட்டனர். ஆனால், அந்த நபரோ எதுவும் காதில் விழாமல் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார். திடீரென மின்மாற்றியில் இருந்த ஒயரை அவர் எதிர்பாராதவிதமாக தொட்டார். அடுத்த விநாடியே அவர் மீது குபீரென்று நெருப்பு பற்றியது. அந்த நபர் கீழே சரிந்தார்.

அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நபர் இருப்பதாக மருத்துவமனை தரப்பு தெரிவிக்கிறது. மாவட்ட  ஆட்சியர் வளாகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close