பள்ளி வளாகத்தில் ஆசிரியருக்கு சரமாரி கத்திகுத்து..  

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 09:47 am
madurai-teacher-threatened-and-stabbed

மதுரை தெற்குவாசல் பகுதியில் உள்ள தனியார் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் செல்வகுமார். இவர் பள்ளி வளாகத்தில் காத்திருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி நகை, பணத்தைத் தருமாறு மிரட்டல் விடுத்துள்ளனர். எனினும் ஆசிரியர் உடைமைகளை வழங்க மறுத்துள்ளார். அவர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்தக் கும்பல் உடைமைகளைத் தரத் தயங்கிய ஆசிரியரை தலை மற்றும் கைப் பகுதியில் கத்தியால் குத்தியது. இதில் அவர் ரத்த காயம் ஏற்பட்டு நிலைகுலைந்தார்.

இதனையடுத்து அவர் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகை மற்றும் அவரிடமிருந்த 40 ஆயிரம் பணத்தை வழிப்பறி செய்து விட்டு அக்கும்பல் தப்பியோடினர். படுகாயமடைந்த ஆசிரியர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரையடுத்து இச்சம்பவம் குறித்து தெற்குவாசல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்டது யார்? அல்லது திட்டமிட்டு வேறு காரணத்திற்காக தாக்குதல் நடத்தப்பட்டதா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close