காதலனுடன் தனியாக இருந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல்..

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 11:22 am
19-year-old-gang-raped-bhopal-2-arrested

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 19 வயது மாணவி ஒருவர் தனது வீட்டில் சம்பவத்தன்று ஆண் நண்பருடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை நோட்டமிட்டு இருவர் வீட்டில் புகுந்தனர். பின்னர் அந்த மாணவியையும் அவரது ஆண் நண்பரையும் ஆடையின்றி இணைத்து புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர். தங்களுக்கு ஒத்துழைக்கவில்லையெனில் இந்த புகைப்படம், வீடியோக்களை பெற்றோருக்கு அனுப்புவோம். இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டல் விடுத்தனர். 

இதனையடுத்து ஆண் நண்பரை தனியாக ஒரு அடையில் அடைத்துவிட்டு மாணவியை இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக மாணவி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வீட்டில் புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த ராம் பாபு, ராகேஷ் ராஜ்பூர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

எனினும் இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி மாணவியின் பெற்றோர் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு பின்னர் அவர்கள் ஒப்புதலோடு குற்றவாளிகள் இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள்  இருவரும் குற்றம் செய்ததாக ஒப்புக்கொண்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close