காதல் திருமணம்.. கர்ப்பம்.. தற்கொலை... இரு குடும்பத்தினர் மோதலால் சோகம்

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 10:31 am
pregnant-woman-commits-suicide

கடலூர் மாவட்டம் அக்ரா மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ் என்பவருடன் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி சந்தித்து காதலை வளர்த்தனர். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணமும் நடந்து முடிந்தது. ஜெயஸ்ரீ கர்ப்பமான நிலையில் 5 வது மாதத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் அவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அருண்ராஜ் வீட்டினர் ஜெயஸ்ரீக்கு தங்க வளையல்கள் போட சொல்லி பெண் வீட்டில் கேட்டுக்கொண்டனர். 

ஆனால் நிகழ்ச்சி அன்று வளையல்கள் போடாமல் இருந்ததால் அருண்ராஜ் குடும்பத்துக்கும் ஜெயஸ்ரீ குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜெயஸ்ரீயின் சகோதரர் அருண்ராஜை தாக்கியுள்ளார். பின்னர் இரு வீட்டினரும் சமாதானம் ஆன நிலையில், ஜெயஸ்ரீயை அழைத்துக்கொண்டு அருண்ராஜ் குடும்பம் புதுவைக்கு சென்றுள்ளது. பின்னர் சில நாட்கள் கழித்து ஜெயஸ்ரீ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜெயஸ்ரீயின் வீட்டுக்கு தகவல் வந்தது. இதை கேட்டு அதிர்ச்சியான அவர்கள் உடனே அருண்ராஜ் வீட்டுக்கு விரைந்தனர்.

அங்கு வீட்டின் ஒரு அறையில் கர்ப்பினியான ஜெயஸ்ரீ உயிரிழந்த நிலையில் தொங்குவதை கண்டு கண்ணீர் விட்டு கதறினர். இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்ததை அடித்து ஜெயஸ்ரீயின் உடலை பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே ஜெயஸ்ரீயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close