உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற என் பொண்டாட்டிய காணும்... மைக்செட்டில் கூவிய காங்கிரஸ் பிரமுகர்!

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 10:49 am
congress-member-wife-been-kidnaped

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள் பதவியேற்றனர். மறைமுக தேர்தலுக்காக பதவிகளை கைப்பற்றுவதற்காக மாற்றுக் கட்சி கவுன்சிலர்களை அழைத்துச் செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. அதிமுகவினர் திமுக கவுன்சிலரையும், திமுகவினர் அதிமுக கவுன்சிலர்களையும், சுயேச்சைகளையும் மாறிமாறி கடத்தினர்.

இந்நிலையில் தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்றது முதல் தனது மனைவியை காணவில்லை என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஒன்றிய கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது மனைவியை யாரோ கடத்திவிட்டனர் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் வீட்டை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு மைக் செட் வைத்து கூச்சலிட்டுக் உள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவரது மனைவி வீடியோ ஒன்று வெளியிட்டார். அதில் தன்னை யாரும் கடத்தவில்லை என்றும் தான் பத்திரமாக தான் இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறினார். அவர் முன்னதாக தெரிவித்த புகாரில் காவல்துறையினர் விசாரணையில், அந்த பெண் கவுன்சிலர் உறவினர் வீட்டில் பாதுகாப்பாக உள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இந்த பரபரப்பு ஓய்ந்தது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close