அமெரிக்க படைகள் மீது ஈரான் அதிரடி தாக்குதல்.. ஏவுகணை மூலம் குறிவைத்து தாக்குதல்

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 11:21 am
iran-launched-over-a-dozen-ballistic-missiles

ஈரான் - அமெரிக்கா இடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இந்த பதற்றத்திற்கு முதலில் வித்திட்டது அமெரிக்காவின் தாக்குதல் தான். ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கொல்லப்பட்டார். இது ஈரானுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

மேலும் இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் அமெரிககா ஈரான் இடையே போர் ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. அமெரிக்கா அன்று நடத்திய தாக்குதலுக்குதான் தற்போது ஈரான் திருப்பி பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி ஈராக்கில் இருக்கும் அமெரிக்க விமானப்படை தளம் மீது ஈரான் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த இடத்தில் தான் ஈராக் - அமெரிக்கா ராணுவ வீரர்கள் கூட்டு பயிற்சி மேற்கொள்வர். இந்த இடத்தில் மொத்தம் 12 ராக்கெட் ஏவுகணைகளை ஈரான் பயன்படுத்தி தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. இலக்கை துல்லியமாக தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஆகும் மூலம் ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவை ஈரான் அரசு சார்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உடனே அமெரிக்க படைகள் பதில் தாக்குதல் நிகழ்த்தவில்லை. ஆனால் அமெரிக்க படைகள் விரைவில் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஈராக் படைகளும் தற்போது தயார் நிலையில் இருக்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close