நடிகர் வடிவேலு திடீர் தலைமறைவு?!

  Ramesh   | Last Modified : 08 Jan, 2020 03:27 pm
actor-vadivelu-s-sudden-outburst

நடிகர் விஜயகாந்த்தை எதிர்த்து அரசியல் களத்தில் வாய்ஸ் கொடுக்க துவங்கியதில் இருந்தே நடிகர் வடிவேலுவின் திரையுலக இமேஜ் தொடர்ந்து சரியத் துவங்கியது. போதாத காலம் வந்தா இருக்கிறதையும் சுருட்டிக்கிட்டு போயிடும்னு சொல்ற மாதிரி அதன் பிறகு வந்த வாய்ப்புகளையும் கைப்புள்ள தன்னுடைய வாயால கெடுத்துக்கிட்டாரு. ஒரு பக்கம் ‘எலி’ படத்தோட பிரச்சனைகள், இன்னொரு பக்கம் இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் பாதியில் நின்று போயிருக்கும் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தோட இரண்டாம் பாகம் படத்தின் பிரச்சனை என்று ஏகத்துக்கும் வடிவேலுவின் ரீ -எண்ட்ரிக்கு வில்லனாக நிற்கிறது.

இதையெல்லாம் க்ளியர் செய்யாமல் வடிவேலு சினிமாவில் நடிக்கவே முடியாது என்று நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம் என்று மூலை முடுக்குகளில் இருக்கும் அத்தனை திரையுலக சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எந்த பஞ்சாயத்துக்கும் செவி சாய்க்காமல் சித்தன் போக்கு சிவன் போக்கு என்று இருக்கிறார் வடிவேலு.

சரி இந்த பிரச்சனைகளை முடிக்காமல் சினிமாவில் தானே நடிக்கக் கூடாது என்று வெப் சீரிஸ் பக்கம் கவனம் செலுத்த வடிவேலு துவங்கியிருக்கும் நிலையில் தான் ‘எலி’ படத்தின் பைனான்ஸ் பிரச்சனை தலைத்தூக்கியிருக்கிறது. 

2015ம் ஆண்டு வெளியான எலி படத்துக்கு வடிவேலுவின் நண்பர் ராம்குமார் என்பவர் 2 கோடி கொடுத்து உதவியிருக்கிறார். படம் ரிலீசாகி இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் அந்த பணத்தை தராமல் இழுத்தடித்து வருகிறார் என்றும், வடிவேலுவின் தம்பியான மணிகண்டன் என்பவரின் மூலமாக கொலைச் செய்து விடுவதாக மிரட்டல் விடுத்திருப்பதாகவும் புகார்  கொடுத்திருக்கிறார் ராம்குமார். இந்தப் புகாரின் அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை பதிவு செய்து காவல் துறை விசாரணை நடத்துவதால், வடிவேலு தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. வடிவேலு மீது மதுரை கே புதூர் போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத செக்சனில் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close