நெல்லைக் கண்ணனை ஏன் கைது செய்தோம்? முதல்வர் விளக்கம்!

  சாரா   | Last Modified : 08 Jan, 2020 06:20 pm
reason-behind-nellai-kannan-arrest-says-cm-eddapadi-palanisamy

பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் ஒருமையில் பேசியதால் தான் நெல்லை கண்ணன்  கைது செய்யப்பட்டார். நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை என்று முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்சாவையும் ஒருமையில் பேசியதாக அவர் மீது பாஜகவினர் போலீசில் புகார் அளித்தனர்.

                                                            
நெல்லைக் கண்ணன் மீது அளிக்கப்பட்டிருந்த புகாரின் அடிப்படையில், பெரம்பலூரில் தனியார் விடுதியில் இருந்த நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டு பின்னர்  திருநெல்வேலிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை கண்ணன் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சட்டசபையில், காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ்   நெல்லை கண்ணன்  குறித்து கேள்வி எழுப்பினர்.அவர் கூறுகையில் .நெல்லை கண்ணன் என்ன தவறு செய்தார்? அவரை கைது செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் பழனிசாமி,  நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று எந்த உள்நோக்கமும் அரசுக்கு இல்லை.சட்டரீதியாகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close