ஆவேசமாக சாமியாடும் பெண்! அப்புறமா நடந்ததை வீடியோவில் பாருங்க!!

  அனிதா   | Last Modified : 08 Jan, 2020 03:12 pm
forgery-lady

கிராமங்களில் திருவிழா சமயங்களில் பெண்கள் சாமியாடுவதைப் பார்த்திருப்போம். அப்படி ஆவேசமாக சாமியாடிக் கொண்டிருந்த பெண் ஒருவர், அவர் அருகே நாய் ஒன்று வந்ததும், பயத்தில் ஆக்ரோஷமாக சாமி ஆடுவதை நிறுத்தி விட்டு, நாயைத் துரத்தும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல்  ஆகி வருகிறது.

 

பொதுவாக சாமி வந்து ஆடுபவர்கள் தங்களை மறந்து, சுற்றி நிற்பவர்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஆடுவதாக சொல்லுவார்கள். அந்த நேரத்துல் அவர்களைச் சுற்றி எது நடந்தாலும் அது அவர்களுக்குத் தெரிவதில்லை என்று சொல்லப்படுகிறது. அருள் வந்து சாமியாடுவதாக பாவனை செய்து கொண்டு பொய்யாய் நடிப்பவர்களும் உண்டு. அப்படியான ஒரு வீடியோ வெளியாகி, அருள் வந்து ஆடும் அந்த பெண்ணின் நிஜ ரூபத்தை வெளிச்சமாக்கி இருக்கிறது. ஆவேசமாக அருள் வந்து ஆடுபவரைப் போல ஆடிக் கொண்டிருக்கும் அந்த பெண், தன்னருகே வேகமாக நாய் ஒன்று நெருங்கி வந்ததும் பயந்து பதறி அந்த நாயை விரட்டுவதில் முழு முனைப்பையும் காட்டுகிறார். கொடுமையின் உச்சம்.. அந்த நாய் அங்கிருந்து விலகிச் சென்றதும், விட்ட இடத்தில் இருந்து மீண்டும் தனது சாமி ஆட்டத்தைத் தொடர்கிறார்..

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close