தமிழக அமைச்சர் மீதான வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

  சாரா   | Last Modified : 08 Jan, 2020 04:53 pm
minister-s-p-velumani-case

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது திமுகவும், அறப்போர் இயக்கமும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கில், தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே டெண்டர்களை ஒதுக்கி தமிழக அரசுக்கு பெரும் வருமான இழப்பை ஏற்படுத்தி இருப்பதாகத் தெரிவித்தனர். மேலும் இது குறித்து  நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் வேலுமணி மீதான புகார் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 23ம் தேதிக்கு  ஒத்தி வைத்தது நீதிமன்றம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close