உஷார்!! தமிழகத்தில் அதிகரிக்கும் நோய்! வெளியான அதிர்ச்சி தகவல்!

  சாரா   | Last Modified : 08 Jan, 2020 04:48 pm
tamilnadu-to-become-the-no-1-in-overstress-work

துரித உணவு பழக்க வழக்கங்கள், பணம் பணம் என்று 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருப்பது, இரவுகளில் தூக்கத்தை இழந்து விட்டு பகலில் தூங்கிக் கொண்டிருப்பது, எப்போதும் ஏதாவது ஒரு டார்க்கெட்டை முடிவு செய்து விட்டு அதை நோக்கி பரபரவென்று சதா சிந்தித்துக் கொண்டிருப்பது என்று இன்றைய இளசுகளின் மனதை முழுவதுமாக ஒருவிதமான பதற்றம் ஆட்கொண்டு இருக்கிறது. 

தற்போது இந்தியர்கள் அனைவரையும் மன அழுத்த நோய் ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மக்களிடையே ஒரு விதமான பதற்றமும், மன அழுத்தமும் நாளுக்கு நாள் அதிகரித்து, இதனால் பல்வேறு விதமான நோய்கள் வர வழிவகுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மட்டும்  4.3 சதவீத தற்கொலைகள் மன அழுத்தத்தினால் ஏற்பட்டுள்ளது என்றும், 1,00,000 பேரில் 1,325 பேர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தகவல் தொழில் நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்களும், இளம் பெண்களும் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாக முடிவுகள் வெளியாகி திடுக்கிட வைக்கின்றன.

இது தொடர்பாக ஆய்வு நடத்திய தி லான்செட் சைக்கியாட்ரியானது 1990 முதல் இந்த விவகாரத்தில் ஆய்வுகளை நடத்தி முடிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. அப்படி  இந்தியாவிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இந்திய மக்கள் தங்கள் இயலாமை மற்றும் தாழ்வு மனப்பான்மை மேலும் உடல்நிலை சோர்வு ஆகியவற்றுடன் எதிலுமே நாட்டமின்மை போன்றவைகளால் மன நோய்க்கு தள்ளப்பட்டு பாதிக்கப்படுவதாகவும் இதற்கு எல்லாம் மன அழுத்தம் தான் காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது.

                                                


இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு லட்சம் மக்களில் குறைந்தது 836 பேர்கள் இந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இந்நோய்க்கு அதிகமாக பாதிகப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாட்டு தான் முதலிடம் வகிப்பதாகவும் கூறியுள்ளது.  தமிழ்நாட்டில் வாழுகின்ற மக்கள் மனப் பதற்றம் தொடர்பாக பாதிக்கப்படுவதாகவும் இது அதிகரித்து வருவதாக தெரிவித்த நிலையில் மன அழுத்தம் காரணமாக தமிழ்நாட்டில் மட்டும் 1,00,000 லட்சம் பேரில் 1,325 பேர் மனநலம் பாதிக்கப்பட்டு கடுமையாக உளைச்சலுக்கு ஆளவதாகவும் கூறியுள்ளது. மேலும்,  இருமுனையப் பிறழ்வு (Bipolar disorder) மற்றும் மனச்சிதைவு போன்ற நோயாலும் தமிழக மக்கள் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் குறிப்பாக 2017ம் வருடத்திற்கு பிறகு இந்த மன அழுத்தம் மக்களிடையே தற்போது  இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன்படி 2016 ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 4.3%  தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது என்று கூறுகிறது.

மேலும் 130 கோடி மக்களை கொண்ட இந்தியாவில் ஏழில் ஒருவர் மனநல நோயால் பாதிக்கப்பட்டுகின்றனர் என்றும் மன அழுத்தம், மனப்பதட்டம் மற்றும் மனச் சோர்வு, மனச் சிதைவு முதலியவற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடம் வகுப்பது வருத்ததையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

                                          
மன நோயை சரி செய்யும் வகையில் தமிழக அரசும் தனியார் மையங்களோடு இணைந்து மக்களுக்கு மனநல ஆலோசனைகளை அளித்து வருகின்றது. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண தெளிவான ஒரு விழிப்புணர்வு அளிக்க வேண்டும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close