இன்று பிரதோஷ வழிபாடு செய்தால் உங்க பசங்களோட படிப்பு சூப்பரா இருக்கும்!

  சாரா   | Last Modified : 08 Jan, 2020 04:30 pm
today-is-the-special-day-for-shivan

புதன் கிழமையை புதவார் என்று சொல்வார்கள். கல்விக்கு அதிபதி புதன் கடவுள் என்பது எல்லோருக்கும் தெரியும். பள்ளி,கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகள் உங்க வீட்டில் இருக்கிறார்களா? அப்போ உங்கள் பிள்ளைகளின் கல்வி சிறக்கவும், அவர்கள் படிப்பில் உன்னத நிலையை அடையவும் இன்றைய பிரதோஷ வழிபாட்டை கட்டாயமா செய்யுங்க.
அதனால், இன்று மாலையில் அருகில் இருக்கிற ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குச் சென்று சிவனையும், நந்தி தேவரையும் தரிசனம் செய்தால், உங்கள் பிள்ளைகளின் பள்ளி கல்லூரி படிப்பு மேம்படும் என்பது உறுதி.

அவங்களோட படிப்பு சம்பந்தப்பட்ட அனைத்து கவலைகளும் அதுக்கப்புறமா பறந்தோடும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு. பொதுவாக, சிவன் கோயிலுக்குச் சென்றால், சிவபெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வணங்குவோம். வழிபடுவோம்.

                                                  


ஆனால் இன்றைய நாள், நந்தி தேவருக்கான நாள். இன்று ஆலயத்தின் உள்ளே நுழைந்ததுமே நாம் தரிசிக்கும் நந்திதேவவருக்கான முக்கியமான பூஜையே பிரதோஷ பூஜை தான். அதனால், இந்த புத்வார் பிரதோஷ தினத்தில் நந்திதேவரையும் சிவபெருமானையும் கண்ணார தரிசித்து, மனதார பிரார்த்தனைச் செய்து பலனடையுங்கள்.
மாலை 6 மணிக்குள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். அப்படி தரிசனத்திற்குச் செல்லும் பொழுது, மறக்காமல் நந்திதேவருக்கு வில்வமும், அரளியும் வாங்கிச் சென்று சார்த்துங்கள். அருகம்புல் மாலை கொடுத்து வணங்கி வழிபட்டாலும் சிறப்பு. இன்று பிரதோஷ வேளையில் சிவனையும், நந்தியையும் நிச்சயம் பலன்களைத் தரும்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close