அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நற்செய்தி! வெளியானது புது அறிவிப்பு!

  சாரா   | Last Modified : 08 Jan, 2020 05:15 pm
tamilnadu-medical-scheme-to-be-extended-till-2022

தமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு, சிறப்பு அம்சங்களுடன் கூடிய  மருத்துவ காப்பீட்டு திட்டம் 2022ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சட்டபேரவையில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் க.அன்பழகன் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அரசு தொடர்ந்து செயல்படுத்துமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஓய்வூதியத்தாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்  2014-ல் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டு 2018-ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. அப்போது 2 லட்சம் ரூபாய் அளவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. மீண்டும் இந்த திட்டம் 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டுவரை சில சிறப்பு அம்சங்களுடன்  நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் என  மொத்தம் 114 வகையான சிகிச்சை பெறலாம், அதற்காக ரூ. 4 லட்சம் வரை மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

                                                     

இந்த திட்டம் பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மற்றும் எம்.டி. இந்தியா நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது. இதற்கு காப்பீடு கட்டணமாக மாதந்தோறும் ரூ.350 பிடித்தம் செய்யப்பட்டு வருவதாகவும், இந்த புதிய திட்டத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை உள்பட முக்கிய சிகிச்சை பெற உச்சவரம்பு ரூ.7.50 லட்சம் வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களின் பெற்றோருக்கும் சிகிச்சை அளிப்பது குறித்து அரசு பரிசீலிக்க உள்ளதாகவும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close