மகள் திருமண கார் மீது மாட்டுச்சாணியைப் பூசிய அப்பா! காரணம் என்ன தெரியுமா?

  சாரா   | Last Modified : 08 Jan, 2020 06:17 pm
car-with-cow-dung-coating

பெற்ற மகளின் திருமணத்தின் போது, கல்யாண பரிசாக மகளுக்கு விலை உயர்ந்த கார் ஒன்றை பரிசளிக்க முடிவு செய்திருந்தார் அவரது தந்தை. பின் அந்தக் காரை ஊர்வலத்திற்காக பயன்படுத்தவும் திட்டமிட்டிருந்தார். பின்னர் டாக்டரான அந்த தந்தை செய்த வினோதமான காரியம் தான் இப்போது வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரைச் சேர்ந்த டாக்டர் நவ்நாத் என்பவர், மகளின் திருமணத்தில் வித்தியாசமான பரிசு எதையாவது தர வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். ரொம்ப நாட்களாக யோசித்து, பின்னர் விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கி, அதன் மீது மாட்டு சாணத்தால் 'கோட்டிங்' கொடுத்துள்ளார். 

திருமணத்திற்கு வந்திருந்த அனைவருமே இந்த வினோதமான காரை ஆச்சரியத்துடன் ரசித்து காரணம் கேட்டார்கள். மகளையும், மருமகனையும் அந்த காரிலேயே ஊர்வலமாக அழைத்து வந்து, திருமண மேடையில் கார் மீது மாட்டு சாணம் மூலம் கோட்டிங் கொடுத்ததற்கான காரணத்தையும் வெளியிட்டார் டாக்டர்.

மாட்டு சாணத்தின் நன்மைகளை மற்றவர்களுக்கு உணர்த்துவதற்கும், அதைப் பிரபலப்படுத்துவதற்கும் இப்படி செய்ததாக சொன்ன அவர், சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பசுக்களின் பங்கு முக்கியமானது. மாட்டு சாணத்தால் கேன்சரை குணப்படுத்த முடியும் மற்றும் மனித உடலில் இருந்து நோய்களை அகற்றும் திறன் உள்ளது. அதனால் தான் காரில் மாட்டு சாணத்தால் 'கோட்டிங்' செய்தேன். இப்படி செய்தால், கார் கேபினின் இருந்து வரும் வெப்பநிலை குறையும் என்பதோடு, செல்போன் கதிர்வீச்சில் இருந்தும் நாம் காப்பாற்றப்படுவோம் என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close