பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு நாளை முதல் தொடக்கம்

  சாரா   | Last Modified : 09 Jan, 2020 12:52 pm
pongal-special-bus-reservation-from-tomorrow

தமிழகத்தில் பொங்கல்  பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் இப்போதிருந்தே தயாராகி வருகிறார்கள்.  பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஜனவரி 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், இந்த நாட்களில் வெளியூர் செல்வதற்கான முன்பதிவு நாளை முதல் தொடங்கவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று திரும்ப ஏதுவாக 29 ஆயிரத்து 213 பேருந்துகள் மாநிலம் முழுக்க இயக்கப்படவிருக்கின்றன. சென்னையில் இருந்து மட்டும் சுமார் 4,950 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எம்ஜிஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு, தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட 5 இடங்களில் இருந்தும் வரும் 12,13 மற்றும் 14ஆகிய தேதிகளில் பொதுமக்களின் வசதிக்காக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

                                                      

தீபாவளியின் போது சுமார் 4267 பேருந்துகள் மட்டுமே சென்னையிலிருந்து இயக்கப்பட்ட நிலையில், தற்போது மக்களின் வசதிக்காக கூடுதலான எண்ணிக்கையில், சுமார் 4,950 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது சுமார் 683 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close