கை, கால்களை கட்டி கிணற்றில் வீசி கொடூரமாக சிறுவன் கொலை..  

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 06:26 am
school-student-murder-in-chengalpattu

செங்கல்பட்டை அடுத்த வெண்பாக்கம் பகுதியை சேர்ந்த முருகன் - உஷா தம்பதியின் மகன் புருஷோத்தமன்(14). இவர் செங்கல்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற புருஷோத்தமனை காணவில்லை. பல இடங்களிலும் நண்பர்கள் வீட்டிலும் தேடி பார்த்தும் மகனை காணவில்லை என்பதால் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதனையடுத்து காவல்துறையினர் சிறுவனைத் தேடிவந்தனர். இதனிடையே வெண்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி மையம் அருகே விவசாய கிணற்றில் உடல் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனே தீயணைப்பு துறை, காவல்துறையினர் அங்கு விரைந்து கிணற்றில் மிதந்த உடலை கைப்பற்றினர். அந்த உடலின் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கிணற்றில் மிதந்து கொண்டிருந்த உடல் காணாமல்போன புருஷோத்தமன் என அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் சிறுவனை கொலை செய்தது யார்? எந்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனின் நண்பர்களிடமும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close