தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டம்..? 3 ஸ்லீப்பர் செல்கள் ஆயுதங்களுடன் கைது..!

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 06:40 am
sleeper-cells-arrested-chennai-police

தமிழகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக அண்மையில் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து மக்கள் நடமாடும் இடங்களில், முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பெங்களூருவில் 3 பேர் பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு விரைந்த தமிழக காவல்துறையினர் முகமது ஹனிப் கான், இம்ரான்கான், சையது ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து மூன்று துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலையில் தொடர்புடைய காஜா மொய்தீன், சையதுஅலி நவாஸ், அப்துல் ஷமீம் ஆகியோர் வெளிநாடு தப்பிசெல்ல உதவியது தெரியவந்தது. மேலும் தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரும் சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close