ஆண் வாரிசு இல்லை.. 3 பெண் குழந்தைகளின் தாய் செய்த அதிர்ச்சி சம்பவம்..

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 07:13 am
mother-suicide-of-3-women

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தின் சுங்கேசுலா என்ற பகுதியில் ஜெகதீஷ் - சரம்மா என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர், இந்த தம்பதிக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்தன. அந்த மூன்று குழந்தைகளும் பெண் குழந்தைகள் என்பதால் சரம்மாளை கணவரின் உறவினர்கள் அவ்வப்போது திட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் குடும்ப வாரிசாக ஒரு மகன் இல்லையே என நீண்ட காலமாக வருத்தத்தில் இருந்துள்ளார் சரம்மா.

தவிர மாதவிடாய் சுழற்சியின் போதும் மிக கடுமையான வயிற்று வலியால் தொடர்ந்து பல மாதங்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த 2 காரணங்களுக்காகவும், வீட்டில் யாரும் இல்லாதபோது சரம்மா மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சிடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close