படிப்புக்காக காதலை உதறிய மாணவி கொடூரக் கொலை..! சைக்கோ காதலன் கைது..

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 07:14 am
youth-arrested-for-murdering-student

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 17 வயதான கோபிகா என்ற மாணவி 12ஆம் வகுப்பு பயின்று வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த ஜாபர் ஷா என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையே வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற ஜாபர் ஷாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவருடன் பேசுவதை கோபிகா குறைத்துள்ளார். காதலியிடம் பேச முடியாமல் தவித்த ஜாபர் ஷா, திரும்பி வந்து எர்ணாகுளத்தில் பணிபுரிந்தார். 

பின்னர் கோபிகாவை நேரில் சந்தித்த ஜாபர் ஷா, உனக்காக வெளிநாட்டு வேலையை உதறிதள்ளி விட்டு வந்துள்ளதாகவும், எனவே தன்னை பழையபடி காதலித்து திருமணம் செய்து கொள்ளும் படியும் கூறியுள்ளார். அதற்கு கல்லூரி படிப்பை முடிக்க வேண்டும் என்றும், திருமணத்தைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என கூறி கோபிகா திருமணத்திற்கு மறுத்துவிட்டார். இது தொடர்பாக பல முறை கேட்டும் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ஜாபர் ஷா, அவரை தீர்த்துக்கட்டுவது என முடிவு எடுத்தார். இதற்காக தான் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து கார் ஒன்றை திருடி மாணவி கோபிகாவை நைசாக பேசி காரில் ஏற்றியுள்ளார். பள்ளிக்கு சென்ற மாணவி கோபிகாவும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய காவல்துறையினர் மாணவியை ஜாபர் ஷா கடத்தியிருக்கலாம் என கண்டுபிடித்து அவரது நிறுவனத்திற்கு சென்றப்போது அவர் காருடன் மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து காரில் இருந்த ஜிபிஎஸ் கருவி மூலம் அவர்கள் வால்பாறை நோக்கி சென்றதை கண்டறிந்தனர். உடனடியாக வால்பாறை போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் படி, வாட்டர் பால்ஸ் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த காரை வால்பாறை போலீசார் மடக்கி நிறுத்தியுள்ளனர். காரில் ஜாபர் ஷா மட்டுமே இருந்த நிலையில் அவனை பிடித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. பள்ளிக்கு சென்ற கோபிகாவிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய ஜாபர் ஷா, அவரை வீட்டிற்கு செல்ல விடாமல் காரில் கட்டாயப்படுத்தி அமர வைத்து வால்பாறை நோக்கி அழைத்து வந்துள்ளான்.

வரும் வழியில் இருவருக்கும் காதல் தொடர்பான பிரச்சனை மூண்டுள்ளது. அப்போது கத்தியால் காதலியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த ஜாபர் ஷா உடலை மலைப்பகுதியில் வீசியுள்ளான். ஜாபர் ஷா கூறிய இடத்திற்குச் சென்ற வால்பாறை போலீசார் கோபிகாவின் சடலத்தை மீட்டனர். பின்னர் எர்ணாகுளம் போலீசாரிடம் கொலை குறித்த தகவலை தெரிவித்தனர். விரைந்து வந்த எர்ணாகுளம் போலீசார், ஜாபர் ஷா வை கைது செய்து, கோபிகாவின் சடலத்தை மீட்டுச் சென்றனர். ஜாபர் ஷா வை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close