மாணவியை பலாத்காரம் செய்த பண்ணையார்! ஊர் மக்கள் சேர்ந்து வெளுத்தனர்!

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 11:41 am
girl-sexually-harassed-by-bog-shot-of-the-village

ஹைதராபாத்தின் கலபாதரில் 5 வயது மகளுடன் பெற்றோர் வசித்து வந்தனர். இக்குடும்பத்தினர் அப்பகுதியில் உள்ள பண்ணையாரிடம் வீடு மற்றும் தோட்டத்தில் கூலி வேலை பார்த்து வந்தனர். அவருக்கு வயது 46. அவர்களின் 1 ஆம் வகுப்பு படிக்கும் மகள் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முதலாளி சிறுமியை தனது வீட்டிற்கு இழுத்து சென்று ஒரு அறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார் .

பாதிக்கப்பட்ட சிறுமி அழத் தொடங்கியதும், முதலாளி அந்த சிறுமியை விடுவித்தார். அழுது கொண்டே வீட்டிற்கு வந்த சிறுமியிடம் 'ஏன் அழுகிறாய்' என தாய் கேட்டுள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி விவரிக்க பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதற்குள் இந்த விஷயம் அந்த பகுதியில் பரவி, ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பண்ணையாரை அடித்து வெளுத்தனர். 

பின்னர் முதலாளி மீது பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சிறுமியின் பெற்றோர் தினசரி கூலித் தொழிலாளர்களாக அவரிடம் வேலை செய்தும், அவருக்கு சொந்தமான வீட்டில் ஐந்து ஆண்டுகளாக குத்தகைதாரர்களாகவும் வசித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close