50 பேரிடம் மோசடி செய்த பணத்துடன் 10 கள்ளக்காதலிகளுடன் உல்லாசம்.. கண் பார்வையற்றவரின் காம லீலை..

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 09:55 am
money-cheating-counterfeit-girl-friend-jolly-disabilities-arrest

சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் அஸ்ரப் அலி (24). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார். பெங்களூருவுக்கு ஒரு நிறுவனத்தின் நேர்முக தேர்வுக்கு சென்று விட்டு பேருந்தில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்த கண் பார்வையற்ற மாற்று திறனாளியான டேவிட் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அஸ்ரப் அலியின் செல்போன் எண்களை வாங்கிய டேவிட், அஷ்ரப் அலியிடம் அடிக்கடி பேசி வந்தார். அப்போது ஆஸ்திரேலியாவில் உள்ள ரெனால்ட் நிசான் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பிய அஸ்ரப் அலி 4.25 லட்சத்தை டேவிட்டிடம் கொடுத்தார்.

பணத்தை வாங்கிய டேவிட் கூறிய படி வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பல முறை திருப்பி கேட்டும் பணத்தை கொடுக்காததால் அஸ்ரப் அலி சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் டேவிட்டை கடந்த 6-ம் தேதி கைது செய்தனர். பின்னர் டேவிட்டிடம் நடத்திய பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அதில், கண் பார்வையிழந்த டேவிட் பேருந்துகளில் அதிக அளவில் பயணம் செய்வார். கண் பார்வையற்றவர் என்பதால் பயணிகளும் அவருக்கு உதவி செய்வார்கள். அப்போது அருகில் இருக்கும் பயணிகளிடம் நைசாக பேச்சு கொடுத்து செல்போன் எண்களை பெற்றுக்கொள்வார். பின்னர் வீட்டிற்கு சென்றதும் அவர்களை தொடர்பு கொண்டு இனிக்க, இனிக்க பேசி பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வார்.

அப்போது தனக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகள் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் வேலை வாங்கி கொடுக்க தயாராக உள்ளதாகவும் கூறுவார். இதனை நம்பி பணம் கொடுப்பவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் 50-க்கும் மேற்பட்டோரிடம் 50 லட்சத்திற்கும் அதிகமாக பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

மேலும், பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும், 10-க்கும் மேற்பட்ட கள்ளக்காதலிகளை வைத்து மோசடி பணத்தை அவர்களுக்கு கொடுத்து உல்லாசம் அனுபவித்ததும் தெரிய வந்தது. சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close