சொத்துடன் சேர்த்து மனைவியும் அபகரிப்பு.. காவல் உதவி ஆய்வாளர் மீது கணவர் புகார்

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 10:48 am
police-si-robbed-with-wife

தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் உதவி ஆய்வாளர் மீது ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் வசித்து வரும் ஜனார்த்தனன் - நர்மதா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சவூதி அரேபியாவில் பணிபுரிந்த ஜனார்த்தனன் கடந்த மே மாதம் சென்னை திரும்பினார். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்த ஜனார்த்தனன், தனது மனைவி நர்மதா, திருநின்றவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் ஆகியோர் மீது புகார் அளித்தார்.

அதில், தனது மனைவி நர்மதாவுக்கும் திருநின்றவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ் என்பவருக்கும், தவறான உறவு இருப்பதாகவும், அதை தட்டிக் கேட்டபோது காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நர்மதாவும், உதவி ஆய்வாளர் ராஜேஸும் தனிமையில் சந்தித்தபோது அவர்களை பின் தொடர்ந்து புகைப்படம் எடுத்ததாகவும், இதனை பார்த்த உதவி ஆய்வாளர் ராஜேஷ் தன்னை மிகக் கடுமையாக தாக்கியதாகவும் ஜனார்த்தனன் கூறியுள்ளார்.

மேலும், தனது குழந்தைகள் பெயரில் வாங்கிய 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உதவி ஆய்வாளருடன் சேர்ந்து நர்மதா அபகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்ததாக ஜனார்த்தனன் தெரிவித்தார். 
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close