மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து மரத்தில் தொங்கவிட்ட கொடூரம்..

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 11:15 am
teenager-gang-raped-and-killed-in-gujarat

குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியை சேர்ந்த 19 வயது தலித் இளம்பெண் ஒருவர் கடந்த மாதம் 31ஆம் தேதி மாயமானார். அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணையில் அந்த பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இளம்பெண் அங்குள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்தக்கோரி பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் பிமல், தர்‌ஷன், சதீஷ் மற்றும் ஜிகர் ஆகிய 4 பேர் கும்பல், பெண்ணை கடத்தி ஆள்நடமாட்டம் இல்லாதத்திற்கு தூக்கிச் சென்று கற்பழித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் தடயங்களை மறைக்க அப்பெண்ணின் உடலை அங்குள்ள மரத்தில் கட்டி தொங்கவிட்டு தப்பியோடினர். அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close