போதையில், டிவியால் தலையில் அடித்துக் கொன்ற பேரன்! குடியால் சீரழியும் தமிழகம்!

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 11:56 am
79-year-old-elderly-woman-murder-in-erode

ஈரோடு, சென்னிமலை ரோடு, விவேகானந்தா நகரைச் சேர்ந்தவர் ஜோகராம்மாள் (வயது79). இவர் தனது மகனின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் மூதாட்டி ஜோகராம்மாளின் பேரன் பீர் முகமதின் மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டதால அவருடன் வசித்து வந்தார். பீர் முகமது அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து பாட்டியுடன் தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. அதைபோல் அதிகாலை 2 மணி அளவில் குடிபோதையில் பீர்முகமது வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது போதையில் தூங்கிக் கொண்டிருந்த பாட்டி ஜோகராம்மாளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பீர்முகமது வீட்டில் இருந்த டி.வி.யை எடுத்து ஜோகராம்மாள் தலையில் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் பீர்முகமது வீட்டுக்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஜோகராம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பீர்முகமதுவை கைது செய்தனர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close