எஸ்.ஐ.யைக் சுட்டுக் கொன்றவர்களின் புகைப்படங்கள் வெளியானது! சிசிடிவி காட்சி மூலம் விசாரணை!

  முத்து   | Last Modified : 09 Jan, 2020 12:33 pm
si-killed-by-someone-and-of-photos-of-suspects

காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்திற்கு இடமான இருவரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். வில்சன் பணியில் இருந்த போது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றனர். அதில் வில்சனின் தலை, மார்பு, கால் ஆகிய பகுதிகளில் குண்டுகள் பாய்ந்து அவர் உயிரிழந்தார். 

அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் முகத்தை மறைத்தபடி வந்த இளைஞர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிய குற்றவாளிகளின் அடையாளம் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. அதன்படி குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  தவுபீக், ஷமீம் ஆகிய இரண்டு பேர் வில்சனை சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் கேரளா சாலையில் தப்பிச்சென்றிருப்பதால் அம்மாநில காவல் துறையினரின் உதவியுடன் தேடும் பணி நடைபெற்று வருகிறது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருந்தவர்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close