தமிழகத்தில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது!

  சாரா   | Last Modified : 09 Jan, 2020 12:52 pm
pongal-gifts-starts-from-today-in-ration-shops

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை வருவதையொட்டி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்றும் இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி,1 கிலோ  சர்க்கரை, 2 அடி துண்டு கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறும் என்றும் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை இன்று  துவங்கி ஜனவரி 12ம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க உள்ள நிலையில் ஜனவரி 10ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை என்றும் அதற்கு பதிலாக 16ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஜனவரி 9 முதல் 12ம் தேதி வரை ஒவ்வொரு கடையிலும், எந்தெந்த தினத்தில், எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளது என்கிற விபரங்கள் வழக்கமாக பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளின் முன்பு ஒட்டப்படும். என்றும், குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் வரிசை எண் உள்ள தேதியில் சென்று பொங்கல் பரிசை வாங்கி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close