தங்கத்தின் விலை திடீர் சரிவு! நகைக்கடைகளில் அலைமோதும் கூட்டம்!

  சாரா   | Last Modified : 09 Jan, 2020 01:18 pm
sudden-slash-in-gold-price

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.67 குறைந்து, ரூ.3,830க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.536 குறைந்து, ரூ.30,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஒரு வாரத்தில்  மட்டும் தங்கத்தின் விலை ரூ.1,552 உயர்ந்துள்ள நிலையில் இன்று சவரனுக்கு ரூ.536 குறைந்தது மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இதன் மூலம், தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 31 ஆயிரம் கீழ் வந்தது. இன்னும் சில நாட்களில் தை மாதம் பிறக்க இருப்பதால், திருமணத்திற்காக நகைகளை வாங்க காத்திருந்த பொதுமக்கள், மீண்டும் தங்கத்தின் விலை ஏறி விடுமோ என்கிற அச்சத்தில் நகைக் கடைகளை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.

அமெரிக்க, ஈரான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதும் தங்கத்தின் விலையேற்றத்திற்கு ஒரு காரணமாக சொல்லப்பட்டு வந்துள்ள நிலையில், தங்கத்தின் விலையில் இந்த திடீர் மாறுதல் பொதுமக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதனால் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் இன்று அலைமோதத் துவங்கியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close